தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக நாடு 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக சென்ற வாரம் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 1,91,350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் இடங்களை மாநகராட்சியின் வலைதள பக்கம் அல்லது 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.