தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்ட பொறியாளர்- 9443132839, உதவி கோட்ட பொறியாளர் (சென்னை மாநகர சாலைகள்) – 7010105959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.