Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும்விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.சென்னையில் அதிக காற்று மற்றும் அதிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |