Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 19 ஆம் தேதி…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 1600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |