Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா?…. நாளை(ஆகஸ்ட் 7) மெகா தடுப்பூசி முகாம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் நான்காம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் வருகின்ற 7 ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்திவுள்ளது

 

Categories

Tech |