Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே 2 நாளைக்கு ஜாலியா இருங்க…. மழை வராது…. குட் நியூஸ்….!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை வரும் 4 ஆம் தேதி காலை நெருங்கும்.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி முதல் தென் கடலோர, உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் , 2 நாட்களுக்கு மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |