வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி பரவியிருப்பதால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு. புயல் பற்றி தற்போது கணிப்பு எதுவும் இல்லை