புவியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என கூறுகின்றோம். இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருகின்ற காரணத்தினால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரிகிறது நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது சந்திர கிரகணம் ஆகும். இந்தப் பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும் அதனால் முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை எனவே நிலவின் ஒரு பகுதி அதிகமான இருளாகவும் மற்ற பகுதிகள் குறைவான இருளாகவும் காணப்படுகிறது.
இது பகுதி சந்திர கிரகணமாகும் இதே போல் பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதினால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். மேலும் முழு சந்திர கிரகணம் வருகிற எட்டாம் தேதி இந்திய நிரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைகிறது. சென்னையில் மாலை ஐந்து முப்பத்தி எட்டு மணிக்கு தான் சந்திரன் உதயமாகிறது. அதனால் முழு கிரகணத்தை பார்க்க முடியாது ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி நேரத்தை வரை வெறும் கண்களால் பார்க்கலாம். மேற்கண்ட தகவல்களை சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.