சென்னை பிராட்வேயில் இருந்து ஓஎம்ஆர் வழியாக 21ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வருகின்ற 21 ஆம் தேதி முதல் சென்னை பிராட்வேயில் இருந்து ஓஎம்ஆர் வழியாக மதுரை, நெல்லைக்கு இரு வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் மதுரைக்கு இரண்டு பேருந்துகள் இரண்டு நகரங்களில் இருந்து காலை 8 மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் இயக்கப்படும். சென்னை மற்றும் வெள்ளை பேருந்து இரு நகரங்களிலும் இரவு 7 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.