தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழைநீரில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது மட்டுமல்லாமல் அரசு இதுபோன்ற அவலங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.