Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்…. 26 இடங்களில் நீரூற்றுகள்…4.62 கோடி ஒதுக்கீடு…!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு செலவிற்க்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டிற்க்கான  கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூட்டத்தில் இன்று காலை பத்து மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பெருநகர சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின் போது திருக்குறள் வாசித்து மாமன்ற உரையை மேயர் ஆர்.பிரியா துவங்கி வைத்துள்ளார். இதற்கிடையே சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

#லைவ் அப்டேட் சென்னை மாநகராட்சி பட்ஜெட்: சென்னையி குளங்கள் ரூ.143 கோடியில் மேம்படுத்துப்படும்
சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு ரூ. 4.62 கோடி ஒதுக்கீடு
* 30 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளுக்கு ரூ.32.38 கோடி ஒதுக்கீடு
* மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் ரூ.80 லட்சம் செலவில் நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்
சென்னை மாநகரை அழகு படுத்தும் நோக்கத்தில் பல்வேறு மண்டலங்கள் தமிழக அரசால் இருபத்தி ஆறு எண்ணிக்கையிலான நீரூற்றுகள் அமைக்கும் பணிக்கு ரூபாய் 1.29 கோடி நிதி சிங்காரச் சென்னை 2.o திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது. கீழ்க்கண்ட இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாதத்திற்குள் மொத்த பணிகள் முடிக்கப்படும்.
1. எண்ணூர் விரைவு சாலை, சைக்லோன் ஷெல்டர் அருகில்,
2. மஞ்சம்பாக்கம், மணலி, 200 அடி சாலை சந்திப்பு,
3. ஜி.என்.டி சாலை, மூலக்கடை சந்திப்பு,
4. 200 அடி சாலை எம்.ஆர்.எச்.சாலை ரவுண்டானா (டிராபிக் ஐலேன்ட்),
5. பாந்தியன் சாலை,
6. மான்டியத் சாலை மற்றும் ஆர்.கே லட்சுமிபதி சாலை சந்திப்பு,
7. ராஜாஜி சாலை-என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு,
8. பெரம்பூர் நெடுஞ்சாலை (வடக்கு) முரசொலி மாறன் பூங்கா,
9. பெரம்பூர் பாலம் தெற்கு,
10. ஸ்ட்ராஹன்ஸ் சாலை புதிய மண்டலம் அருகில்,
11. சூளை நெடுஞ்சாலை,
12. சி.டி.எச். சாலை சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் எதிரில் அம்பத்தூர் ராக்கி தியேட்டர்,
13. முதல் நிழற்சாலை, புல்லா அவென்யூ சந்திப்பு,
14. ஹடோஸ் சாலை, கல்லூரி சாலை சந்திப்பு,
15. டாக்டர்.பெசன்ட் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகில்,
16. கோயம்பேடு 100 அடி சாலை,
17. ஆற்காடு சாலை, அல்சா டவர் அருகில்,
18. ஆற்காடு சாலை, மண்டல அலுவலகம்,
19. உள்வட்ட சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், எதிரில்,
20. ஜி.எஸ்.டி சாலை, சாந்தி பெட்ரோல் பங்க் எதிரில்,
21. மலர் மருத்துவமனை, எல்.பி. சாலை ஆவின் பூங்கா முன்பு,
22. தாலுகா அலுவலகம் சாலை, ராஜ்பவன் முன்பு,
23. எம்.ஜி.ஆர் சாலை மற்றும் தரமணி சாலை சந்திப்பு (தரமணி ரெயில் நிலையம், எஸ்.ஆர்.பி டூல்ஸ் அருகில்),
24.வி.ஜி.பி பூங்கா, பாலவாக்கம்
25. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் எதிரில் பாலத்தின் கீழ்,
26. ஓ.எம்.ஆர் கே.கே சாலை சந்திப்பு.
ரூ.143 கோடி செலவில் குளங்களை மேம்படுத்தும் பணி
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள குளங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 5 மிகப்பெரிய குளங்கள் புனரமைப்பு பணி ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ரூட் 2.0 திட்ட நிதியில் இருந்து கீழ்கண்ட இடங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மணலி ஏலி, சாத்தாங்காடு குளம், சடையன்குப்பம் குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளம்.
நடப்பு நிதியாண்டில் இருந்து மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக மண்டலம்-4 மற்றும் மண்டலம்- 6-ல் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதியின் கீழும், மற்ற மண்டலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியின் மூலமும், வருடம் முழுவதும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
டிரோன்கள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.4.62 கோடி
கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிர படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் 30 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும்  எந்திரங்கள், நூறு எண்ணிக்கையிலான கையில் எடுத்துச் செல்லும் புகைப்பரப்பும்  எந்திரங்கள் மற்றும் 200 எண்ணிக்கையிலான கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும் சென்ற ஆண்டைப் போலவே ஆளில்லா வானூர்தி மூலம் கொசுப்புழு கொல்லி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 4.62 கோடி ஒதுக்கப்படும். மேலும் 2022-23 நிதியாண்டில் மூன்று புதிய வீடு இல்லாதவர்களுக்கு  காப்பகங்கள் கட்டுவதற்காக தீர்மானிக்கப்பட்டு அதை 2.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |