தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எதிர்பாராத அளவிற்கு மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதனை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 281 பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.அவர்களுக்கான சம்பளத்தை கல்வி நிலை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆலோசித்து முடிவெடுக்கும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.