சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியத்துடன் சென்று வருகின்றன.
இதனால் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிர படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், சென்னை மாநகரிலுள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துவதற்கு மகாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ 500 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.