சென்னை மாநகரிலுள்ள பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் 15 மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பூங்காக்களை தத்தெடுப்பு முறையில் பராமரிக்க முன் வருபவர்களுக்கு வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற ஈ இமெயில் ஐடி மூலம் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.