Categories
மாநில செய்திகள்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை… 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

வங்க கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் வரையில் 11 இடங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம் மற்றும் நாகை உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதை அடுத்து, மீன்பிடிக்க கடலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்ப சாட்டிலைட் போன் மற்றும் தொலைபேசி மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |