சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா பரவளின் மையமாக தலைநகர் சென்னை இருந்ததை தொடர்ந்து தமிழக அரசு சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு, கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்த கட்டுப்பாடு உதவிகரமாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த 7 நாட்களாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று 2000த்திற்கும் கீழ் சென்றது.
இந்த நிலையில் தான் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முக்கியமான முடிவை எடுத்து, முறையாக அமுல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது சென்னையில் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி, மீன் அங்காடிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றதது.
கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 பேர் கொண்ட சந்தை ஒழுங்குபடுத்தல் குழுவும், வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.