தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பரவலாக்கும் முயற்சியாக சென்னையில் 4 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் வார்டுக்கு இரண்டு தடுப்பூசி முகாம்கள் வீதம் 400 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் முகாம்கள் நடைபெற உள்ளன.எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.