தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது யாரும் இல்லையே உள்ளே செல்லவும் முடியாது போன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கால் பதித்துள்ளது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமாகப் பரவும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதனை தொடந்து சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு தற்போது 17 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.