Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் இன்று முதல்…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் என்ற சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே தொற்றை கட்டுப்படுத்தும் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் உள்ளிட்டவைகள் அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |