தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 500 மாநகரப் பேருந்துகளில் அபாயமணி பொருத்தப்பட்டு உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கேமராவுடன் இணைக்கப்பட்ட இந்த கருவி பட்டனை அழுத்தியவுடன் எம்டிசி கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசுக்கும் தகவல் அனுப்பி விடும். விரைவில் சென்னையில் ஓடும் 2800 பேருந்துகளிலும் இது பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த புதிய சேவை பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.