சென்னையில் கனமழை காரணமாக தேங்கிய குப்பை கழிவுகள் அனைத்தையும் தீவிர தூய்மை பணி மூலம் மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியவை நீர் இறைக்கும் பம்புகள் வெளியேற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும்,மழை நீரில் அடித்து வரப்பட்ட பொருள்களின் தேக்கத்தின் காரணமாகவும் சாலைகள் மற்றும் தெருக்களில் திடக்கழிவுகள் தேங்கியுள்ளது.
மாநகராட்சி பணியாளர்களால் இந்த திட கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன. தீவிர தூய்மைப் பணியை மேற்கொள்ள பிற நகராட்சிகளில் இருந்து 500 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ளதால் பழுதான தெரு விளக்குகளை இன்றுக்குள் சீரமைக்கவும், பொது இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மரக்கிளைகள், தோட்ட கழிவுகளை அகற்றவும் ஆணையிட்டுள்ளார்.மேலும் பிற நகராட்சியில் இருந்து 500 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.