Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்…. 2ஆம் கட்ட பணிக்கு ரூ. 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி  3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 வழித்தடங்களில் இந்த பணிகள் என்பது இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  தற்போது சென்னை மாதவரம் முதல் சிஎம்டிஏ வரை முதல் கட்டமாக 10.1 கிலோமீட்டர் வரை இருப்பு பாதை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 206.64 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தமானது தற்போது கையெழுத்து ஆகியுள்ளது.

ஜப்பானில் இருக்கக்கூடிய வங்கியின் (JICA) நிதி உதவியுடன் KEC-VNC-JV  ஆகிய கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன

Categories

Tech |