Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ -2ஆம் கட்ட திட்டத்திற்கு… மத்திய அரசு அனுமதி…..!!!!

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் – சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், பூந்த மல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில்  திட்டம் எந்தவித தாமதமும் இன்றி செயல்பட, தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள்  தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு  வழங்க வேண்டிய நிதி தமிழக அரசு மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில்   திட்டப் பணிகளை 2026-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |