சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுடன் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் நிரம்பிவிட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸில் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று கூறப்படுகிறது. சென்னையில் இரவு நேரங்களில் பத்து ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையின் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் மூச்சு திணறலுடன் பல நோயாளிகள் வருவதால் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தினால் மருத்துவமனை நிர்வாகம் தடுமாறி வருகிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகளை சுமார் 10,000 படுக்கை உயர்த்துவதும், சென்னையில் மேலும் 5000 படுக்கைகளை உயர்த்துவதும் தேவையாகி உள்ளது. இது குறித்து மு க ஸ்டாலின் சுகாதாரத்துடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.