தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டு விஷயத்தில் அவ்வப்போது சில புதிய திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரேஷன் கார்டு விஷயத்தில் உள்ள குறைகளை கேட்டறிய மற்றும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகிய செயல்பாடுகளை செய்ய சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற ஜூன் 11ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த மையம் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை ரேஷன் அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.