Categories
மாநில செய்திகள்

சென்னை லாட்ஜிகளில் பகீர்…. திடீரென உள்ளே புகுந்த போலீசார்….. நடந்தது என்ன….?

சென்னை மாநகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பிருந்தார். அதன்படி களத்தில் இறங்கிய போலீசார் தலைமுறை குற்றவாளிகளை கைது செய்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பழைய குற்றவாளிகளை கண்காணிந்து குற்றம் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜுகள் மேஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் சிறப்பு வாகன தணிக்கைகள் செய்யவும் சங்கர் ஜிவால் உத்தரவு விட்டார். அதன்படி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிறப்பு தணிக்கை ஈடுபட்டனர். சென்னை பெருநகரிலுள்ள 491 லாஜுகள் மேன்ஷஙன்கள் ஆகியவற்றில் சோதனை செய்தனர்.

அதில் பழைய குற்றவாளிகள் யாராவது இருக்கிறார்களா என்று தேடினார். மேலும் சந்தேகம் நவர்கள் யாருன்னு தங்கி உள்ளார்கள் என்றும் சோதனை செய்தனர். இது தவிர ஆயுதங்கள், போதைப்பொருட்கள் வைத்துள்ளார்கள் என்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு உரிமையாளர் மற்றும் மேலாளர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதாவது, சந்தேக நபர்கள் இருந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சந்தேகப்படும் பொருட்கள் வைத்திருந்தாலும் தகவல் தெரிவிப்பது மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல் சரியான அடையாள அட்டை இல்லை எனில் அவர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். நேற்று இரவு சென்னையில் முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகள் தற்காலிக தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகனம் தணிக்கை ஈடுபட்டனர். அப்போது 3,978 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றில் பயணம் செய்த நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் மது அருந்தி பயணம் செய்தார்களா? உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று விசாரிக்கப்பட்டது. இதில் 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் Face Recongnition Software மூலம் 2,236 பேரிடம் குற்ற நபர்களா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |