Categories
மாநில செய்திகள்

சென்னை வங்கி கொள்ளை…… சிக்கினார் மாஸ்டர் மைண்ட் முருகன்….. அதிரடி திருப்பம்….!!!

சென்னையில் பெட்ரல் வங்கியில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைதாகி உள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும் ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வங்கியின் சார்பில் பொதுமக்களிடமிருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் மற்றொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளியுடன் இணைந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

முருகன் தனது ஜிம் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார். மேலும் பெட்ரல் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு எல்லா ஐடியாக்களையும் கொடுத்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகியோர் மூன்று பேர் கைது செய்யப்பட்டன. இவர்களிடம் இருந்து 20 கிலோ தங்கம் நகை மீட்கப்பட்டது. பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் பங்கு போட்டு 20 கிலோ நகைகளை பிரித்து எடுத்துக் கொண்டதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தலைமறைவாக உள்ள முருகனை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Categories

Tech |