சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மகேஷ்குமார் போட்டி. மேலும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கே.சரவணன் துணை மேயர் தமிழழகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் ஆர்.ப்ரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக பெரும்பான்மையாக இருப்பதால் இவர் மேயராவது உறுதியாகிவிட்டது. மேயராக பிரியா தேர்வானதால் சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டுகால வரலாற்றில் முதல் இளம் மேயராகவும், இரண்டாவது பெண் மேயராகவும்தடம் பதிப்பார். சென்னையில் முதல் பெண் மேயராக தாரா செரியன் (1957) இல் பதவி வகித்துள்ளார்.