Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை வரும் சசிகலா… ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த செக்…!!!

சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை சென்னை வர உள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லை முதல் சென்னை வரை பிரமாண்டமான அளவில் வரவேற்பு அளிக்க தினகரன் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து இருமுறை டிஜிபியிடம் தமிழக அமைச்சர்கள் புகார் தெரிவித்த நிலையில், சசிகலாவுக்கு வரவேற்பு ஏற்பாடுகளுக்கு டிடிவி தினகரன் காவல்துறை அனுமதி கோரியிருந்தார் . ஆனால், சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணிக்கு அனுமதி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அவருடைய ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, ஆளும் அதிமுக அரசு ஜெயலலிதா நினைவிடம் மற்றும் நினைவு இல்லத்தை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக சசிகலாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்குவதாக சசிகலா ஆதரவாளர்கள் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

Categories

Tech |