பல்வேறு தடைகளுக்குப் பின் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இருக்கிறார். மேலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இரண்டு தரப்பினரும் மாறி மாறி கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள். இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கின்றார். சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க அவர் வர இருக்கின்றார்.
மேலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் லிட்டர் பங்கேற்க இருக்கின்றனர். இந்த சூழலில் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றோர் நேரம் கேட்டிருக்கின்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் அப்பாயிமென்ட் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓ பன்னீர்செல்வத்தை பொருத்தவரை பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றார். கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாலே துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஓ பன்னீர்செல்வம் இது தனி மரியாதை இருக்கிறது. டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஓ பன்னீர் செல்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அடுத்து பின் வரிசையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட இருக்கையில் இல்லாமல் நின்று கொண்டு இருந்ததை காண முடிந்தது. இப்படி ஓ பன்னீர்செல்வம் மீது டெல்லி பாஜகவிற்கு தனி பாசமே உள்ளது என கூறலாம். எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் மோடியிடம் தனிக்கவனம் இருந்தாலும் ஓ பன்னீர்செல்வத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவு என்றே தெரிவிக்கின்றனர். அதனால் சென்னை வரும் பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அப்போது பல்வேறு முக்கிய விவரங்கள் பற்றி பிரதமர் மோடியிடம் ஓ பன்னீர்செல்வம் பேச வாய்ப்பிருப்பதாகவும் இதை தொடர்ந்து அவருக்கு சாதமான நிகழ்வுகள் அரங்கேறலாம் எனவும் விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.