Categories
மாநில செய்திகள்

சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி எல்லாத்துக்குமே 15 நிமிஷம் தான்….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னையில்  புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவது மற்றும் திட்டமிடல் போன்ற பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செய்து வருகிறது. இந்த குழுமம் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், வெளிவட்ட சாலை, பறக்கும் ரயில் திட்டம், கோயம்பேடு வணிக வளாகம் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் போன்ற பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து செயல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெருநகர் வளர்ச்சி குழுமமானது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் சென்னை வாசிகள் 15 நிமிடங்களில் தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பொழுது போக்கு பூங்காக்கள், அலுவலகங்கள், கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் அதற்கு ஏற்ற இடத்தில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ப்ளூ கிரீம் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் 2046-ஆம் ஆண்டிற்குள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகின்றது.

அதன் பிறகு சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, 41 சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் புறநகர் பகுதிகளான திருவள்ளுர், திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நகர்ப்புற திட்டமிடல் பணிகள் சிறப்பாக மேம்படுத்தப்பட இருப்பதால், சென்னை மக்களின் வாழ்க்கை தரம், ஒன்றுபட்ட சமூக நலன் மற்றும் அடிப்படை தேவைகளை எளிதில் அணுகுதல் போன்றவைகள் மேம்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்

Categories

Tech |