Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே…..! போக்குவரத்து மாற்றம்….. எந்தெந்த பகுதிகளிலினு தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பெருகி வரும் வாகன போக்குவரத்து காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாகத் திருப்பிவிடப்படும் எனவும், இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் ‘யு’ திருப்பம் மேற்கொண்டு ஈவிஆர் சாலையைச் சென்று, நெல்சன் மாணிக்கம் சாலையை அடைந்து அமைந்தகரைக்குச் செல்லும் சாலைக்கு மேம்பாலத்தில் வழியாக சென்று அடையலாம்.  அதனை தொடர்ந்து அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வழியாக செல்லலாம்.

ஆர்ச் சந்திப்பில் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது தவிர தடையின்றி செல்லலாம். அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பும் போது பாதசாரி கடக்கும்போது தவிர இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் ‘யு’ திருப்பம் எடுத்து அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும். இதன் மூலம் அரும்பாக்கம் அருகே உள்ள ஈவிஆர் வாகன நெரிசல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |