Categories
தேசிய செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் அஞ்சலில் வரும் பார்சல்கள் தீவிர கண்காணிப்பு …!!

சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அஞ்சல் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்படுவது அதிகரித்து இருக்கும் நிலையில் அஞ்சல் மூலம் விமான நிலையம் வரும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீப காலங்களில் எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் பயன்பாடுகள் சென்னை, மும்பை, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்துள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து அஞ்சல் வழியாக இந்த பார்சல்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் பிரான்சிலிருந்து அஞ்சல் வழியாக வந்த பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் எக்ஸிடசி  வகை மாத்திரைகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் கைப்பற்றபட்டத்தை குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல நாட்டிலுள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அஞ்சல் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து அஞ்சலில் வரும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்க வருவாய் புனல் ஆய்வுத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |