Categories
மாநில செய்திகள்

“சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்”… விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!

கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி சென்னை விமான நிலையம் ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது விமான பயணிகள் வழியனுப்ப வருபவர்கள் விமான நிலைய ஊழியர்கள் என அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும் அவ்வாறு அணியாவிட்டால் வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை.

அதே போல் அனைவரும் முழு பயண நேரத்திலும் முக கவசத்தை முறையாக வாய் மூக்கு முடி இருக்கும் விதத்தில் அணிந்து இருக்க வேண்டும். மேலும் சில பயணிகளுக்கு முகக்கவசம் அணிவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம் அத்தகைய பயணிகள் முறையான அனுமதி பெற்று அணிவதில் விளக்கு பெற்றுக் கொள்ளலாம். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் அது மட்டுமல்லாமல் கொரோனா முழுமையாக நீங்கிவிட்டது என மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவிக்கும் வரையில் சென்னை விமான நிலையத்தில் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |