Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் பணிகள்…. எப்போது முடிவடையும்….? அதிகாரிகள் தகவல்….!!!!

விமான நிலையத்தில் நடைபெறும்  பணிகள் 2025-ஆண்டில் முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம்  முடிவு செய்தது. அதற்காக 2,467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது வெளிநாட்டு முனைவும் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், சில மாதத்தில் அது திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து  அதிகாரிகள் கூறியதாவது, “தற்போது சர்வதேச வருகை பகுதியாக செயல்பட்டு வரும் டெர்மினல்-3  முழுவதுமாக இடிக்கப்பட்டு அதற்கான வேலை தொடங்கப்படும்.

இவை அனைத்தும் இன்னும் 2  ஆண்டுகளில் முடிக்கப்படும். மேலும் 2025-ஆம் ஆண்டு இது   திறக்கும்போது அதில் சுமார் 33 தானியங்கி நுழைவாயிலும், 20 எதோ பிரிட்ஜ்களும் இருக்கும். இந்த பணிகள் தாமதமாக நடைபெறுவதற்கு காரணம் விமான நிலையத்தின்  எல்லையை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும், கொரோனா தொற்றும் தான். கடந்த 2  ஆண்டுகளாக மழையின் காரணமாக  இந்த பணிகள் சரியாக நடைபெறவில்லை” என கூறியுள்ளனர்.

Categories

Tech |