Categories
சென்னை

சென்னை விமான நிலையம்…. தாம்பரம் வழியாக வரும் வாகனங்கள் இனி…. விமான நிலைய ஆணையகம் அனுமதி….!!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு கிண்டி வழியாகச் செல்லும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் வழியாகவும், தாம்பரம், பல்லாவரம் வழியாக வரும் வாகனங்கள் விமான நிலைய காவல் நிலையம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டன. சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தாம்பரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கான நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

இதனால் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. அத்துடன் உள்நாட்டு விமான நிலையத்தை கடந்து வரும் போது சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எனவே பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதன் பின்னர், விமானநிலைய காவல் நிலையம் அருகே மூடி வைக்கப்பட்டிருந்த நுழைவு வாயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

அதன் பெயரில் கடந்த 22 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையம் அருகே உள்ள நுழைவாயிலை மீண்டும் திறப்பதற்கு விமான நிலைய ஆணையகம் அனுமதி வழங்கியது. அதன்படி, நேற்று மாலை முதல் அந்த நுழைவு வாயில் திறந்து விடப்பட்டது. அதனால் தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் இனி காவல் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் செல்லலாம் என்று விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |