Categories
தேசிய செய்திகள்

சென்னை: “வீடுகளை இடிப்பது பற்றிய வழக்கு”…. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சென்னை கோவிந்தசாமி நகர் இளங்கோதெருவில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து பெண் உரிமை இயக்கத் தலைவர் லீலாவதி சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த மனுவில் “புனர்வாழ்வு ஏற்பாடுகளை செய்யாமலேயே இதுவரையிலும் 40 வீடுகளை இடித்து உள்ளனர். இது சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மீறுவது ஆகும். அதுமட்டுமல்லாமல் இப்பகுதியிலுள்ள மக்களை 40 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் குடியமர்த்த போவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக அவர்களின் தினக்கூலி வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஆகவே அருகாமையில் மாற்று குடியிருப்பை ஏற்பாடு செய்யும் வரையில் வீடுகளை இடிக்கும் பணியை உடனே நிறுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு குறித்து மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று ஆஜராகி, சென்னையில் குடிசைப் பகுதியிலுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு இப்போது தேர்வுகள் நடந்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது நீதிபதிகள் இது குறித்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அத்துடன் குடிசைகளை இடிக்கும் பணியை நிறுத்திவைக்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிடுவதா..? என்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Categories

Tech |