சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் நெமிலிச்சேரி இடையேயான சாலை பணிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த வழியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொலப்பஞ்செரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு ,பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே அறிவித்தது. மேலும் கட்டணம் பாஸ்ட்டேக் வழியில் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும், பணம் செலுத்துவோர் இடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.