வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல முக்கிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படிச் என்னையே மழைநீரால் ஸ்தம்பித்து உள்ள நிலையில் நடிகர் மன்சூரலிகான் ஒரு பெட்டியை படகு போல் பயன்படுத்தி அதில் அமர்ந்து பாடல் பாடிக் கொண்டே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது கூட இவர் இப்படித்தான் மழைநீரில் படகு சவாரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.