Categories
மாநில செய்திகள்

சென்னை: 2 வருஷத்தில் அனைத்து மயானங்களும் மின்மயானமாக மாற்றும் முயற்சி?…. மாநகராட்சி நடவடிக்கை…..!!!!

சென்னையில் அனைத்து மயானங்களையும் இரண்டு வருடங்களுக்குள் மின்மயானமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகமானது இறங்கி உள்ளது. சென்னையில் மாநகராட்சியின் வாயிலாக எரியூட்டும், புதைக்கும் வகையில் 209 மயானங்கள் இருக்கிறது. இதில் 49 மயானங்கள் நவீனமான முறையில் எரியூட்டும் அடிப்படையில் உள்ளது. மற்றவை விறகுகள் வாயிலாக எரியூட்டப்படும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் வாயிலாக சென்னை மாநகா் முழுவதும் பல பணிகள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில் ஒன்றாக மயானங்களும் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. விறகுகள் மூலமாக இயங்கி வரும் மயானங்கள், மின்மயானமாக நவீனப்படுத்தப்படுகிறது. தற்போது செயல்பாட்டிலுள்ள மயானங்களை நவீன மயமாக்குதல் மற்றும் புதியதாக அமைக்க 2021-22ம் ஆண்டில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 10 பணிகளுக்கு ரூபாய்.6.13 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டதில் 8 பணிகள் நிறைவடைந்துள்ளது. அதிகளவு செயல்பாட்டிலுள்ள மூலக்கொத்தளம் பகுதியில் 2 யூனிட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நடப்பு ஆண்டில் 27 இடங்களில் 28 யூனிட் அமைக்க ரூபாய்.22.21 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இதில் சத்தியவாணி முத்துநகா், திருவொற்றியூா் குப்பம், கதிா்வேடு, மாதவரம், நொளம்பூா், சிட்கோ (வாா்டு-170), கண்ணகி நகா், சத்தியவாணி முத்து தெரு (வாா்டு-199) ஆகிய இடங்களில் எரியூட்டும் நவீன மயானங்கள் அமையவுள்ளது.  அத்துடன் அதிக செயல்பாட்டிலுள்ள ஜாபா்கான்பேட்டையில் 2 யூனிட் திறனுடைய மின்மயானம் அமைய உள்ளது.

Categories

Tech |