Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சென்று கொண்டிருந்த சரக்கு வேன்…. திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு…. தீயில் கருகிய அட்டைகள்….!!

சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வெண் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகின்றனர். சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று அட்டைகளை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு வெப்படைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அழகாபளையம் பெருமாள் கோவில் காடு அருகே சென்று கொண்டிருந்த பொது சரக்கு வேனில் திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகவேல் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இதனையடுத்து குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சரக்கு வேனில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனாலும் வாகனத்தில் இருந்த அட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |