ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்த நிலையில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தை தரை இறக்கினார்.
மகாராஷ்டிரா நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் நோயாளி, அவரது உறவினர், மருத்துவர், இரண்டு விமான பணியாளர்கள் ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்தது இந்நிலையில் சிறிது தூரம் சென்ற பிறகு விமானத்தின் சக்கரம் கழண்டு விழுவதை கண்டு விமானி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பெல்லி லேண்டிங் முறையில் தரையிறக்க முடிவு செய்தார்.
பெல்லி லேண்டிங் என்பது விமானத்தின் சக்கரம் இல்லாமல் உடற்பகுதியை கொண்டு தரை இறங்குவது ஆகும். அவ்வாறு சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடிக்க வாய்ப்பும் உள்ளது. இதனால் மும்பை சர்வதேச விமானத்தில் பணியாளர்கள் மூலம் விமான ஓடுத்தளத்தில் சோப்பு நுரைகள் தெளிக்கப்பட்டு இருந்தது. மேலும் விமானம் தரை இறங்கியவுடன் பணியாளர்கள் விமானத்தின் மீது தண்ணீர் அடித்தனர். இதனை தொடர்ந்து விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரை இறக்கியதால் 5 உயிர்களும் பத்திரமாக காப்பாற்றப்பட்டு பெரும் விபத்தும் தடுக்கப்பட்டது. இந்நிலையில் சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானிக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.