Categories
மாநில செய்திகள்

“சென்ற 10 வருட காலத்தில் இவர்கள் எதுவுமே பண்ணல”…. அமைச்சர் கே.என்.நேரு ஓபன் டாக்….!!!!!

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும்விழா கலைஞர் கருணாநிதி சாலையில் நடந்தது. இவற்றில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது “சென்னை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்க வேண்டும். அதற்கான திட்டப் பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக கூறினார். அனைத்து இடங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர், பாதாளசாக்கடை திட்டம், அனைத்து இடங்களிலும் கழிவறைதிட்டம், 980 பழைய கழிவறைகளை புதியதாக மாற்ற டெண்டர் விடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வரும் காலத்தில் அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதியும் பெற்ற நகரமாக சென்னை மாநகரம் உருவாகும். அதற்கென முதல்வர் ஸ்டாலின் தனி நிதி ஒதுக்கியுள்ளார். இதுவரையிலும் தமிழகத்திற்கு வேளான் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கி என் வாழ்நாளில் பார்த்ததில்லை. நான் முதல் முதலாவதாக அமைச்சர் ஆனபோது தமிழகத்தின் பட்ஜெட்டே வெரும் 50 ஆயிரம் கோடி தான். சென்ற 10 வருட காலத்தில் அ.தி.மு.க எதுவுமே செய்யவில்லை. அவர்கள் காண்ராக்ட் விடுவது, பணம் எடுப்பது மட்டுமே நடந்தது” என குற்றம் சட்டினார்.

Categories

Tech |