இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக்காலம் இன்றோடு(28.2.2022) முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவர் குறித்த விபரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாதவி புரி புச் செபியின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஐசிஐசிஐயின் செக்யூரிட்டி தலைவராக பணியாற்றியுள்ளார். அதோடு கடந்த 2017 முதல் 2025 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செபியின் முழு நேர உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories