Categories
உலக செய்திகள்

செப்டம்பரில் உணவு பஞ்சம் தலைவிரித்தாடும்…. இலங்கை பிரதமர் எச்சரிக்கை….!!!!

இலங்கையில் உணவு உற்பத்தி பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே பொருளாதாரத்தை உயர்த்த வரிகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் மக்கள் பசி பட்டினியில் இருந்து பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் ஒருவேளை பலருக்கும் உணவு கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரம் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உணவு பொருட்கள் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது போன்றவை நடக்காமல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |