உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை ” என்ற பெயரில் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த தடுப்பூசி கிளினிகல் சோதனை குழந்தைகளிடம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக மிகவும் திறனுடன் செயலாற்றும் என நோவாவேக்ஸ் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.