மாநாடு படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Varum thambi .wait and see 😂 after sep 31 namma attamthan therikka viduvom 🔥
— sureshkamatchi (@sureshkamatchi) September 8, 2021
இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிம்புவின் மாநாடு அப்டேட் மட்டும் ஏன் வரவில்லை’ என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி ‘வரும் தம்பி. வெயிட் அண்ட் ஸி. செப்டம்பர் 31-க்கு பிறகு நம்ம ஆட்டம்தான். தெறிக்க விடுவோம்’ என பதிவிட்டுள்ளார். இதனால் அடுத்த மாதம் முதல் மாநாடு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.