Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….. என்னென்ன ஸ்பெஷல்….? இதோ லிஸ்ட்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில்செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்நிலையில் ஏழுமலையான் திருக்கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் விழாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,

*செப்டம்பர் 1 (ரிஷி பஞ்சமி)
*செப்டம்பர் 6 மற்றும் (21 சர்வ ஏகாதேசி)
*செப்டம்பர் 7 (வாமன ஜெயந்தி)
*செப்டம்பர் 9 (அனந்த பத்மநாப விரதம்)
*செப்டம்பர் 11 (மகாளய பக்ஷம் ஆரம்பம்)
*செப்டம்பர் 13 (பிருஹத்யும விரதம்)
*செப்டம்பர் 20 (வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார்     திருமஞ்சனம்)
*செப்டம்பர் 25 (மஹாலயா அமாவாசை)
*செப்டம்பர் 26 (பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம்)
*செப்டம்பர் 27 (வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்)

மேலும் மேற்குறிப்பிட்ட விழா குறித்த பட்டியலை திருப்பதி தேவஸ்தானத்தினர் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |