Categories
சினிமா தமிழ் சினிமா

செப்டம்பர் மாதம் திரையரங்கில்…. வெளியாகும் 3 திரைப்படங்கள்…!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இதனால் இதனால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் பட்சத்தில் ஆதி நடிப்பில் வெளியாகும் சிவகுமாரின் சபதம், ஆர்யா நடிப்பில் வெளியாகும் அரண்மனை3 மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் பாடர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Categories

Tech |