Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகின்றன.அவ்வாறு எங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை என்கின்ற அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்படுகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் அதாவது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1– விநாயகர் சதுர்த்தி(இரண்டாம் நாள்) காரணமாக கோவாவின் பனாஜியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 4 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 6 – கர்ம பூஜை காரணமாக ஜார்கண்டில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

செப்டம்பர் 7 மற்றும் 8 – ஓணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 9 – இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 10 – ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 11 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 18 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

செப்டம்பர் 24 – நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 25 – ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 26 – நவராத்திரி விழாவையொட்டி மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

 

Categories

Tech |